கோவையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்திய 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவைக்கு 2 நாள் பயணமாக ஆளுநர் வந்துள்ளார். இந்நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில், லாலி ரோடு சாலையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பாதுகாப்பு கருதி ஆளுநர் வருகை தரும் சாலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.