டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ஒன்றாம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளப் பிரச்சனை மற்றும் தேர்தல் இருப்பதால் பங்கேற்க போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளதால், இந்த கூட்டத்தில், பிரதமர் யார் என்பது குறித்தும், வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.