"நைசா பேசி சிக்க வச்சிட்டாங்க." - "அந்த லேடி ஒரு புரோக்கர்.." "என்ன அசிங்க படுத்த பாக்குறாங்க"

Update: 2024-03-11 16:03 GMT

செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர், இறால் தொழில் பண்ணை அமைக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் குறைந்த வட்டியில் 15 கோடி ரூபாய் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக, முனியசாமியிடம் இருந்து கமிஷனாக 15 லட்சம் ரூபாயை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி பணம் வாங்கித் தராமல் ஏமாற்றியதால், கொடுத்த பணத்தை முனியசாமி கேட்டுள்ளார். அப்போது, பவர் ஸ்டார் கொடுத்த 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இந்த செக் மோசடி தொடர்பான வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி, பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில், நீதிபதி முன்பு ஆஜரானார். இதனிடையே, தன் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும், அதற்காக மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்