பழனியில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்கே சென்று வருவாய்த் துறை அலுவலர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெறும் பணியைத் துவங்கியுள்ளனர். பழனி தாலுகாவில் 124 பேர் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதில், 83 பேர் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்தவர்கள். தேர்தல் பணியாளர்கள் 3 பிரிவுகளாகப் பிரிந்து வீட்டிற்குச் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். இன்றும் நாளையும் இந்த பணி நடைபெற உள்ளது.