அன்று அதிமுக இன்று... வேட்கையுடன் களப்பணி

Update: 2024-03-22 16:38 GMT

கூட்டணி குறித்த முடிவு மக்களவைத் தேர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதில் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அன்புமணி, அதிமுகவுடனும், திமுகவுடனும் கூட்டணி அமைக்கும் தேர்தல்களில் எல்லாம் பாமகவின் வாக்குகள் அக்கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும், ஆனால், பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிகளின் வாக்குகள் முழுமையாக பாமகவிற்குக் கிடைக்காது எனவும் தெரிவித்தார்... கடந்த தேர்தல்களில் பாமகவைத் தேடி வந்து கூட்டணி அமைத்திருக்கா விட்டால் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 2019 தேர்தலில் வெறும் 18 சதவீத வாக்கு வாங்கிய அதிமுக 2021 தேர்தலில் 33.29 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற 66 இடங்களில் 36 தொகுதிகளுக்கு பாமக தான் காரணம் என தெரிவித்த அவர், 2006ஆம் ஆண்டில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட பா.ம.க. நிபந்தனையின்றி ஆதரவு அளித்ததற்கான நன்றிக்கடனை திமுக காட்டவில்லை என்று குறிப்பிட்டார்... இதையடுத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாமகவிற்கும், கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி தேடித்தர வேட்கையுடன் களப்பணி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்