சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், தனியார் நிறுவனம் ஆரம்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சுப்பிரமணியபாரதி, ஜெயராமன், ஜெயக்குமார், நரேஷ்குமார் மற்றும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் ஊழியர் தந்தீஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். துணைவேந்தர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அவரிடமும் விசாரணை மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாகி சசிகுமார், பேராசிரியர்கள் உட்பட 8 நபர்களுக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.