விஜயகாந்தின் இறுதி சடங்கை பார்க்க குவிந்த மக்கள்.. - பால்கனியாக மாறிய கோயம்பேடு பாலம்..
விஜயகாந்தின் இறுதி சடங்கை பார்க்க, கோயம்பேட்டில் உள்ள மேம்பாலத்தில் பால்கனியில் நிற்பது போன்று பொதுமக்கள் குவிந்தனர். காவல்துறையினர், தடுப்புகளை அமைத்திருந்தபோதும், பெண்களும் சுவரில் ஏறி குதித்து பாலத்திற்கு சென்றனர். சாலைக்கு நடுவில் உள்ள தடுப்புகளிலும் பெண்கள் ஏறி குதித்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.