மக்களே உஷார்...அதுவும் 9 மாவட்டங்களில்..! வெளியான ஷாக் தகவல் | Tamilnadu Weather | Rains
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மழை பெய்யும் என அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை ஆறு நாட்கள், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.