ரூ.25 லட்சம் மதிப்பில் பூங்கா...'நோ' சொன்ன கிராம மக்கள்...முற்றிய வாக்குவாதம் - அதிர்ச்சி
தருமபுரி மாவட்டம் வடசந்தையூரில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில், 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடையுடன் கூடிய மரகத பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மரகத பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பூங்கா அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட சென்ற, பொம்மிடி ஊராட்சிமன்ற தலைவர் முருகனை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, வாரசந்தை நடக்கும் இடத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்