ரூ.100 கோடிக்கு மேல் மோசடி-திடீரென மூடிய நகைகடை கிளைகள்-விளம்பர தூதுவராக பிரபல நடிகர்..கதறும் மக்கள்

Update: 2023-10-17 08:13 GMT

நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பர தூதுவராக நடித்த நகைக் கடை, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த‌தாக குற்றம் சாட்டி, திருச்சியில் உள்ள அதன் கிளையை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, குமரி,

மதுரை உட்பட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்துள்ளார். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம், மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பத்து மாத முடிவில் 106 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இதை நம்பி 1 கோடி ரூபாய் வரை பலர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2 மாதங்களாக, நகைக்கடை கொடுத்த காசோலைகள் பணமில்லாத காரணதால் திரும்பி வந்துள்ளன. இந்நிலையில், திருச்சி தவிர மற்ற கிளைகள் திடீரென மூடப்பட்டதால், முதலீட்டாளர்கள் கடையை முற்றுகையிட்டனர். 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்