தமிழகத்தை அதல பாதளாத்திற்கு திமுக அரசு அழைத்துச் செல்வதாக ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் எண்ணற்ற கொலை, கொள்ளை நடைபெற்று வருவதாகவும், மது மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுவதே இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.