தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், பல மாவட்டங்களில் ஆய்வு செய்த போது, ஆங்கிலப் பெயர்ப்பலகைகளே மிகுதியாக காணப்படுவதாக கூறிப்பிட்டார். நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போது பெயர்பலகைகள் தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையானதாக அமைவதை உறுதி செய்யும் வகையில், டிசம்பர் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் நடத்துமாறு அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவுறுத்தினார்.