"ஒரே டிக்கெட், ஒரே சீட், ஒரே டைம்"..சீட் ஒண்ணுதான் ஆனா டிக்கெட் ரெண்டு..அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
தர்மபுரியில் இருந்து சென்னை செல்ல ஒரே இருக்கைக்கு இரண்டு நபர்களுக்கு போக்குவரத்துக்கழகம் முன்பதிவு செய்ததாக பயணிகள் தெரிவித்தனர். தர்மபுரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், 3 நாட்களுக்கு முன் சென்னை செல்ல அரசு பேருந்தில் முன்பதிவு செய்தார். அதே பேருந்தில் மற்றொரு நபருக்கு தர்மபுரி மண்டல போக்குவரத்து கழகம் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் பேருந்தில் ஏறி அமரும்போது இருக்கை பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் குறுஞ்செய்தியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.