தனியார் மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-10-27 14:34 GMT

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பூவனூர் aகிராமத்தை சேர்ந்த சரிதா என்ற 19 வயது மாணவி, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், மருத்துவமனையின் மொட்டை மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்