"யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது" - பசியோடு கதறும் விவசாயிகள்

Update: 2023-10-10 09:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பூக்குளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், 10 நாட்களுக்கும் மேலாக, விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையத்தின் வாசலில் நெல்லை பாதுகாத்து வரும் விவசாயிகள், திடீரென மழை பெய்கிறது என்றும், எத்தனை நாட்களாக காத்திருப்பது என்றும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். மேலும், கைச்செலவிற்கே அதிக பணம் செலவாகிறது, இரவு முழுக்க ஆடு, மாடு, பன்றிகள் மேயாமல் இருக்க, காவல் காக்க வேண்டியுள்ளது என்றும் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்