"பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு உரிய சிகிச்சை இல்லை" - ராஜாஜி மருத்துவமனை மீது பரபரப்பு புகார்

Update: 2023-09-30 16:05 GMT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண், பிரசவ வலி காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்தார்.

இதேபோல், ஆரம்ப சுகாதார நிலைய பரிந்துரையின்பேரில் ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் இம்மாதம் மட்டும் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மகப்பேறு வார்டு மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகராட்சி ஆணையர் பிரவீண்குமாரிடம்,

அனைத்து சுகாதார நிலைய மருத்துவர்கள் புகார் அளித்தனர்.

மேலும், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு கர்ப்பிணி தாய்மார்கள் தள்ளப்படுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்