ஜன.9ம் தேதி No Leave..! மீறினால்... வார்னிங் கொடுத்த போக்குவரத்து துறை | TN Bus Strike
அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஒன்பதாம் தேதி பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்று யாருக்கும் விடுப்போ, ஓய்வோ இல்லை என்றும், வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்கள் கூட உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது