7வது நாளாக பணிகளை மேற்கொண்டுள்ள என்.எல்.சி. | Cuddalore | NLC | Cuddalore | NLC

Update: 2023-08-02 09:14 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால் கால்வாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி. நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், என்.எல்.சி நிறுவனம், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை கடந்த 26-ம் தேதி தொடங்கியது. பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியின்போது நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதாக விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 7-வது நாளாக இன்று, வளையமாதேவி கிராமத்தில் இருந்து தர்மநல்லூர் கிராமம் வரை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டப்பட்டு மண் அகற்றப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்