நிர்மலா தேவி விவகாரத்தில், நக்கீரன் கோபாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு கல்லூரி பெண்களை தவறாக வழி நடத்தியதாக, கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருடன், அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி கட்டுரைகள் வெளியிட்டதாக, நக்கீரன் கோபாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், அந்தக் கட்டுரையால் ஆளுநர் தனது அரசியல் சாசன கடமைகளை செய்ய முடியவில்லை என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.