தாயுடன் சேர்ந்து மனைவி கதையை முடித்த காதல் கணவன் - காரணம் தான் அதிர்ச்சியின் உச்சம்

Update: 2024-09-01 12:36 GMT

காந்தல் பகுதியைச் சேர்ந்த இம்ரான்கானும், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆஷிகா பர்வீனும் காதலித்து, கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இதனிடையே, கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர், ஆஷிகாவை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி ஆஷிகா பர்வீன் வாயில் நுரை தள்ளிய நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆஷிகாவின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான் கான், மாமியார் யாஸ்மின், மைத்துனர் முக்தார், மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் காலிஃப் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்