சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி - கண்களுக்கு விருந்தளிக்கும் புதிய அருவிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பல புதிய அருவிகள் தோன்றியுள்ளது. மேகங்களுக்கு நடுவே ஓவேலி, பந்தலூர், நடுவட்டம் மலைக்குன்றுகளில் வெள்ளியை கரைத்து ஊற்றியது போன்று ஆங்காங்கே அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.