பேய் மழையால் ஸ்தம்பித்த உதகை..மொத்தமாக சூழ்ந்த மழைநீர் - பரபரப்பு காட்சிகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மத்திய பேருந்து நிலையம், ரயில்வே பாலம் மற்றும் ரயில்வே காவல்நிலையம் ஆகியவை நீரில் மூழ்கின. ரயில்வே மேம்பாலத்தில் சுமார் 5 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால், ஒரு பிக்கப் வாகனம் மற்றும் ஒரு கார் மழைநீரில் சிக்கிக்கொண்டது. மத்திய பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் தேங்கியதால், பெரும்பாலான அரசுப்பேருந்துகள், பேருந்து நிலையத்தின் வெளியே நிறுத்தப்பட்டன.