மகனை தாக்கிய 5ம் வகுப்பு மாணவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய பெற்றோர் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-09-14 02:09 GMT

பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், தன் மகனை தாக்கியதாக கூறி சக மாணவனை தாக்கிய பெண்னை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்த தம்பதி ஜோதி கிளி - இசக்கிராணி. தம்பதியின் மகள் தருவையில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், சக மாணவருடன் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், தன் மகனுடன் சண்டை பிடித்த சக மாணவனை, அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தம்பதி பிடித்து தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையை கையிலெடுத்த போலீசார், ஜோதி கிளி - இசக்கிராணி தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து, சிறுவனின் தாய் இசக்கி ராணியை கைது செய்திருக்கும் நிலையில், தலைமறைவாக இருக்கும் ஜோதி கிளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்