நாமக்கல் என்கவுண்டரில் பலியான வடக்கு கொள்ளையனின் சகோதரன் கேட்ட விஷயம்.. அதிர்ந்த போலீஸ்

Update: 2024-09-29 05:32 GMT

கேரள மாநிலம் திருச்சூரில், ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், தமிழ்நாடு வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது, நாமக்கல் போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் ஜீமாந்திரன் என்ற கொள்ளையன் உயிரிழந்த நிலையில், அஜர் அலி என்பவர் காயம் அடைந்தார். லாரியில் இருந்த மற்ற கொள்ளையர்களான, இர்பான், சவுக்கீன் கான், முகமது இக்ரம், சபீர், முபாரகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 67 லட்சம் ரூபாய் பணமும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில், 5 பேரும் 12 நாட்கள் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்