சாலையில் கிடைந்த பார்சல் -பதறி போன மாற்றுத்திறனாளி -அடுத்த நொடி அவர் செய்த செயல்
நாகர்கோவில் அருகே சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் அவரது சகோதரருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பார்வதிபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி கோலப்பன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சாலையில் நடந்து சென்ற போது கிடைத்த பார்சலை எடுத்துள்ளனர். அதனுள் பத்தாயிரத்து 941 ரூபாய் ரொக்க பணம், வங்கி கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என சில ஆவணங்கள் இருந்துள்ளன. அதனை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க சென்ற போது, ஊழியர் ஒருவர் அனுமதிக்காததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அருகிலுள்ள காவல்நிலையம் சென்ற இருவரும், காவலர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர்.