வெறியாட்டம் ஆடிய இயற்கை...சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - அச்சத்தில் மக்கள்

Update: 2024-10-25 01:41 GMT

வெறியாட்டம் ஆடிய இயற்கை...சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - அச்சத்தில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கன மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி பொதுமக்கள் சிரமத்தில் ஆழ்ந்தனர். இதற்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதையில், தொடர் மழை காரணமாக மதில் சுவர் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதை சீர்குலைந்து அந்த வளாகமே தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்