தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் பூஜையுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 26 கோடி செலவில் பிரமாண்ட புதிய கட்டடம் கட்ட 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை 20 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்ட நிலையில், இன்னும் 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தேவைப்படுவதாக பொருளாளர் கார்த்தி கூறினார். அதை தெடார்ந்து நடிகர்கள் ரஜினி, கமல், விஜய்,உதயநிதி ஆகியோர் கட்டட பணிகளுக்கு தலா ஒரு கோடி நிதி கொடுத்தனர். இதையடுத்து நடிகர் சங்க கட்டட பணிகள் நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கின. இதில் நாசர்,கார்த்தி, பூச்சி முருகன், குமாரி சச்சு உட்பட பலர் கலந்துகொண்டனர்.