"நான் கட்டிய பணம் எங்கே?" - ஊழியர்களை உள்ளே வைத்து பேங்கையே இழுத்து பூட்டிய குடும்பம்

Update: 2024-07-11 06:00 GMT

நான் கட்டிய பணம் எங்கே?" - ஊழியர்களை உள்ளே வைத்து பேங்கையே இழுத்து பூட்டிய குடும்பம்

கடலூரில் தனியார் வங்கியில் மூன்று மாத தவணை கட்டியும் , பணத்தை கட்டவில்லை எனக் கூறியதால் வங்கி ஊழியர்களை வங்கிக்குள் வைத்து பூட்டிய குடும்பத்தினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் இம்பிரியல் சாலையில் அமைந்துள்ள தனியார் வங்கியில் இரண்டு இரு சக்கர வாகனத்திற்கான லோனை பெற்றுள்ளார் கடலூர் வண்டி பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார். இவர் கடந்த மூன்று மாதமாக லோனுக்கான மாதாந்திர கடன் தவணையை வங்கியின் கலெக்ஷன் ஏஜென்ட்டிற்கு ஜிபி மூலமாக கட்டியுள்ளார். சர்வர் பிராப்ளம் காரணமாக ரசீது வரவில்லை என கூறி வந்த கலெக்ஷன் ஏஜென்ட், வேலையில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று மாதமாக லோனுக்கான தவணையை செலுத்தவில்லை என வங்கி ஊழியர்கள் நந்தகுமாரிடம் கேட்டுள்ளனர். நடந்தவற்றைக் கூறிய போது, வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டவே, ஆத்திரமடைந்த நந்தகுமார் தனது குடும்பத்தினருடன் வந்து வாங்கிக்குள் ஊழியர்களை வைத்து பூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, நந்தகுமாரின் பணத்தை திருப்பி பெற்றுக் கொடுக்க வேண்டியது வங்கியின் பொறுப்பு என கூறி பிரச்சனையை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்