ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதி.. ரூ.1 லட்சம் வெகுமதி கொடுத்த அமைச்சர் உதயநிதி
தென்காசி மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு, தி.மு.க. இளைஞரணி சார்பில், ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்ட அவர்,
இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர் என்று பாராட்டி உள்ளார். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை என்றும் அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் என்றும் அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்