கால்வாயில் கிடந்த பால் பாக்கெட்டுகள்...அதிர்ச்சி செய்தி... நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டிருந்த செய்தி தந்திடிவியில் வெளியான நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, நேரில் ஆய்வு செய்தார்.
மழையின் போது, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதும் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குளக்கரை பின்புறமாக அமைந்துள்ள கால்வாயில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டு இருந்த செய்தி தந்திடிவியில் வெளியானது.
இதன் எதிரொலியாக தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருக்கும் இடத்தை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.