குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவு..தொற்று நோய் பரவும் அபாயம் ..அச்சத்தில் மக்கள்
நெல்லை மாநகரில், குடியிருப்பு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவந்தி நகர் பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. காலாவதியான மருந்துகள், பயன்படுத்தப்படாத மருந்துகள் என குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவக் கழிவுகளை வீசி சென்றவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.