சொத்து தகராறில் மனநலம் பாதித்தவரை கம்பியால் அடித்து கொன்ற உறவினர்கள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்
சொத்து தகராறில் மன நலம் பாதித்தவரை அடித்து கொலை செய்த உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வடகாளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. கூலி வேலை செய்து வரும் இவரின் மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். மகள்களைத் திருமணம் செய்து கொடுத்து விட்ட பின் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மன நலம் பாதிக்கப்பட்டு கலியமூர்த்தி அதற்கான சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். கலியமூர்த்திக்குச் சொந்தமான இடம் மற்றும் வீட்டை தங்களது பெயருக்கு எழுதித்தரக் கோரி உறவினரான சுப்பிரமணியன், அவரது மகன் கருணாநிதி உள்ளிட்டோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பத்தன்று கலியமூர்த்தியை அருகில் உள்ள வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்று சுப்பிரமணியன் உட்பட மூவர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கலியமூர்த்தியைத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் வாழைத்தோப்பில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து இருக்கிறார். இது குறித்து கலியமூர்த்தியின் தாயார் பார்வதி அளித்த புகாரில் சுப்பிரமணியன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்