டெல்லியில் மம்தாவின் ஒற்றை பேட்டி... கேட்டவுடன் கொந்தளித்த CM ஸ்டாலின் - ஆடிப்போன இந்தியா கூட்டணி

Update: 2024-07-28 05:35 GMT

டெல்லியில் மம்தாவின் ஒற்றை பேட்டி

கேட்டவுடன் கொந்தளித்த CM ஸ்டாலின்

"5 நிமிடம் தான்" ஆடிப்போன இந்தியா கூட்டணி

மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் என குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட இந்தியா கூட்டணி முதல்வர்கள், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

ஆனால்... மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி... கூட்டத்தில் பங்கேற்பதாக சொல்லி, பங்கேற்கவும் செய்தார். ஆனால்... பாதியில் வெளிநடப்பு செய்தவர்... கூட்டத்தில் தன்னை அவமதித்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்..

வெறும் 5 நிமிடங்கள் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டேன்.... ஆனால் எனக்கு முன்னால் பேசியவர்களுக்கு 10, 20 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. பேசியபோதே மைக் அணைக்கப்பட்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார் மம்தா பானர்ஜி... இது பெங்காலுக்கு மட்டும் அவமரியாதை இல்லை, அனைத்து பிராந்திய கட்சிகளுக்குமான அவமதிப்பு என குற்றம் சாட்டிய மம்தா... இனி எந்த கூட்டத்திலும் பங்கேற்கப்போவது இல்லை என்றும் அறிவித்தார்...

இதற்கு எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசை காட்டமாக விமர்சித்தன.

நான் பயாலஜிக்கல் பிரதமருக்கு தம்பட்டம் அடிக்கும் அமைப்பாக நிதி ஆயோக் செயல்படுகிறது என விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்... மம்தா பானர்ஜியை நடத்திய விதத்தை ஏற்க முடியாது என விமர்சித்தார். ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு... கட்டமைக்கப்பட்ட கட்டு கதைகளுக்கு பதிலாக மம்தா பானர்ஜி உண்மையை கூற வேண்டும் என விமர்சித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இதற்கிடையே கொல்கத்தா திரும்பிய மம்தா, பேச்சை

நிறுத்துமாறு மணி அடிக்கப்பட்டதாக மீண்டும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுக்கு வலிமையோடு துணை நிற்பதாகவும் குறிப்பிட்டார் மம்தா பானர்ஜி...

நிதி ஆயோக் சி.இ.ஓ. பி.வி.ஆர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்த போது மம்தாவுக்கு பேச 7 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

அந்த நேரம் முடிந்துவிட்டதாக டிஜிட்டல் கடிகாரத்தில் தெரிவிக்கப்பட்டதே தவிர, மைக் எதுவும் அணைக்கப்படவில்லை.... மம்தா புறப்பட்ட பிறகும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் கூட்டத்தில் இருந்தார் எனவும் விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சிகள் செல்லாத கூட்டத்திற்கு சென்ற மம்தா வைத்த அவமதிப்பு குற்றச்சாட்டு, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது  

Tags:    

மேலும் செய்திகள்