ஒற்றை கையெழுத்தால் தலைகீழாக மாற்ற நினைத்த கந்துவட்டி கும்பல்! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-08-17 02:29 GMT

மதுரையை சேர்ந்த இளங்கோ என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2020 ஊரடங்கில் காசோலையிலும், வெற்று காகிதத்திலும் கையெழுத்து போட்டு, தனிநபர்களிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிவித்துள்ளார். 10 % வட்டியில் வாங்கிய கடனுக்கு, வட்டியை அதிகரித்து கட்ட மிரட்டினார்கள், அப்படி இதுவரையில் 2 கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன் என கூறியிருக்கும் அவர், மோட்டார் சைக்கிள், கார் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, எனது நிறுவனத்தையும் கேட்டு மிரட்டுகிறார்கள் எனக் குறிபிட்டுள்ளார். புகாரளித்தும் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, காவல்துறை புகார்களில் நடவடிக்கையை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக பல வழக்குகள் உள்ளன என குறிப்பிட்டார். கந்துவட்டி பிரச்சினையால் ஏராளமான உயிர்கள் பலியாகியிருப்பதாக குறிப்பிட்டவர், போலீஸ் உயர் அதிகாரிகள் முறையாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இளங்கோ வழக்கில் காதமிழக போலீஸ் டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக சேர்த்து, அவர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்