வாட்ஸ் அப்பில் வந்த அபாய லிங்க்.. தொட்டவுடன் எண்ட்ரியான கும்பல்.. செய்வதறியாது அரண்டு போன பெண்..
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், சைபர் க்ரைம் போலீசில் இந்த புகாரை அளித்துள்ளார். லோன் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்கை க்ளிக் செய்த நிலையில், மோசடிக் கும்பல் இவ்வாறு அத்துமீறி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். லிங்க்கை கிளிக் செய்த அடுத்த கணமே, தன் வங்கி கணக்கில் மூன்றாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக கும்பல் செய்தி அனுப்பியதாகவும், ஆனால் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது பணம் ஏதும் வரவு வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், மூன்றாயிரம் ரூபாயை திருப்பி செலுத்தக்கோரி தன் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பிய கும்பல், படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாக அப்பெண் புகாரளித்திருக்கிறார்.