வைகை அணையில் திறக்கப்பட்ட நீர்... சாலைகளில் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-12-12 16:11 GMT

மதுரை வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் யானைக்கால் தரைப்பாலம், கரையோர சாலைகளில் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக ஆயிரத்து 869 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த நீர் வடகரை சாலைகளில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்