பாண்டிய தேசத்தில் உலா வரும் அழகர்கோவில் தேர்.. உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்ற பக்தர்கள் | Thanthitv
மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தரவல்லி தாயார் யானை முன்னதாக பவணி வர அப்போது இசைக்கப்பட்ட செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்டவை பக்தர்களை பரவசப்படுத்தியது.