கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் தினேஷ். பழைய இரு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் இவரிடம், அம்பிகா என்ற பெண்... காவலர் சீருடையில், தான் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் பணிபுரிவதாக கூறி அறிமுகமாகி இருக்கிறார். தொடர்ந்து, காவல்துறை அடையாள அட்டை மற்றும் தன் ஆதார் கார்டை காட்டி இரு சக்கரம் ஒன்றை EMIக்கு வாங்கிய அவர், பணத்தை கட்டாமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். பணத்தை கேட்டு வற்புறுத்திய தினேஷ்க்கு அம்பிகா மிரட்டல் விடுத்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், அம்பிகா காவலர் இல்லை என்பதும், தன்னை போலீஸ் எனக்கூறி அவர் பலரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், போலி போலீஸான அம்பிகா மற்றும அவரது நண்பரான ரகு என்பவரையும் கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அம்பிகாவின் காவல் சீருடைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.