ரூ.7 கோடி நிலத்தை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய கூலித்தொழிலாளி - உடனே பாய்ந்த புகார்

Update: 2023-12-01 15:28 GMT

கன்னியாகுமரியில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்ட நிலையில், அதனை கூலித்தொழிலாளி ஒருவர் ஏலத்தில் எடுத்தது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் நிர்மலன், அதே பகுதியில் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 48 சென்ட் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். தவணைத் தொகையை முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நிலம் மற்றும் வீட்டை ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய்க்கு வங்கி நிர்வாகம் ஏலம் விட்டது. இதனை அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் ஏலத்தில் எடுத்து மூன்று தவணைகளாக செலுத்தியுள்ளார். சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டதுடன், கூலித்தொழிலாளி ஏலத்தில் எடுத்தது குறித்து மாவட்ட காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நிர்மலன் புகார் அளித்தார். இதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்