ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை புத்தூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் என்பவருக்கு, திருமணமாகி காளீஸ்வரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளன. சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அவர், வீடு திரும்பாத நிலையில், கோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கல்லால் தாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.