கூட்டணி தர்மப்படியே நடந்த திமுககாங். மேயருக்கு எதிராக வெடித்த போர்...நெல்லை, கோவை இப்போ கும்பகோணம்
கூட்டணி தர்மப்படியே நடந்த திமுககாங். மேயருக்கு எதிராக வெடித்த போர்...நெல்லை, கோவை இப்போ கும்பகோணம்
நெல்லை, கோவையைத் தொடர்ந்து கும்பகோணத்திலும் மேயர் குறித்து பிரச்சினை கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
கும்பகோணம் மாநகராட்சியில் 2 வார்டுகளை வென்றது காங்கிரஸ்... மேயர் பதவியை கூட்டணி தர்மப்படி காங்கிரசுக்குக் கொடுத்தது திமுக...
அதன்படி சரவணன் மேயராகவும், திமுகவைச் சேர்ந்த சுப.தமிழழகன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர்...
ஆனால் மேயருக்கும் துணை மேயருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது...
திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, பணிகள் குறித்து தன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை என மேயர் கூற... திமுக கவுன்சிலர்களோ...உங்களை யார் தடுத்தது என கேள்வி கேட்க...ஒவ்வொரு கூட்டத்திலுமே மேயருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன...இதனால் அவரால் சுயமாக இயங்க முடியாத சூழல் உருவானதாக கூறப்படுகிறது...
இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது...
ஆணையர் அளித்த 40 விவாதப் பொருள்களில் 29 மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது..
2 கோடியே ரூபாய் மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை கூட்டத்தில் மேயர் விவாத பொருளாக வைக்காததால் கவுன்சிலர்கள் காட்டமாகினர்...
அதற்கான காரணத்தைக் கேட்டு...துணை மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆவேசம் காட்ட மேயர் சரவணன் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை...
ஒருகட்டத்தில் துணை மேயர் சுப தமிழழகன்..."எங்கள் தலைவர் ...முதல்வர் கட்டளையிட்டதால் சகித்துக் கொண்டிடுக்கிறோம்..." எனக்கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது...