கும்பகோணம் அருகே கொள்ளிடத்தில் இருந்து, நாகப்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் திறக்கப்பட்ட பின், குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் வழங்கவில்லை. மேலும் மாற்று ஏற்பாடாக அவர்களுக்கு தண்ணீர் வழங்காததால், கிராம மக்கள் கும்பகோணம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்க படையெடுத்து செல்கின்றனர்.