டெல்லி சென்ற அதிர்ச்சி ரகசியம்.. தமிழக எல்லையில் கிழிக்கப்பட்ட Ex ஆபிஸர் முகம்
கிருஷ்ணகிரியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்த முன்னாள் வன ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக - ஆந்திர மாநில எல்லையோரம், போலி மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநில போலி மதுபானங்கள் கிருஷ்ணகிரியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மது விலக்கு போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். இதில், பவர்ஹவுஸ் காலனி பகுதியில் போலி மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு அனுப்பி வந்த ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் முருகன், சின்ன முனியப்பன் மற்றும் சக்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் போலி மதுபானங்கள், ஸ்டிக்கர்கள், ஆட்டோ மற்றும் 2 இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.