பொழப்பை கெடுத்து வாயில் போடும் தனியார் நிதி நிறுவனம்..! குடும்பம் எடுத்த திடீர் முடிவு..

Update: 2024-09-13 15:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, டிராக்டர் கடனை செலுத்திய நிலையில், அதற்குரிய ஆவணங்களை திரும்பத்தரவில்லை எனக்கூறி, தனியார் நிதி நிறுவனம் முன்பு பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி பூர்விகா, விவசாய தொழிலுக்காக கணவருக்கு டிராக்டர் வாங்கியுள்ளார். இந்நிலையில், டிராக்டரை விற்று கடனை முழுமையாக செலுத்திய நிலையில், டிராக்டரின் ஆர்சி புத்தகம் மற்றும் ஆவணங்களை தரவில்லை என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்