ஆற்றில் கரைந்த விநாயகர்...மேலே நடனம் ஆடிய பிள்ளையார் - கண்களை கவர்ந்த காட்சி
கோவை மாவட்டம் சூலூரில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நொய்யல் ஆற்றில் மேள தாளங்கள் முழங்க 249 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. மேலும் சிலைகளுக்கு முன்பாக தத்ரூபமான விநாயகர் வேடமணிந்து துடும்பு இசைக்கு நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.