கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்தார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், விராலியூர் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை தாக்கியதில், பூசாரி பாஸ்கரன் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்து விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானையை, இளைஞர்கள் கூச்சலிட்டபடி விரட்டிச் சென்றனர். அப்போது கார்த்திக் என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், ஊருக்குள் புகுந்த யானையை கார்த்திக் தனது நண்பருடன் துரத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.