பாசன வாய்க்காலில் தண்ணீர் திருடிய நபர்.. தட்டிக்கேட்ட விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. கோவையில் அதிர்ச்சி

Update: 2024-03-24 15:22 GMT

திருப்பூர் அருகே, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீரை திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே மலைப்பாளையம் கிராமத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் இருந்து தனியார் மட்டை மில் தொழிற்சாலைக்கு, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்துள்ளது. அதனை தட்டிக் கேட்ட ஆனந்த் மீது, தென்னை நார் உற்பத்தி மில் உரிமையாளர் லீலா கிருஷ்ணன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மண்டை உடைந்த நிலையில் விவசாயி ஆனந்த் சிகிச்சைக்காக பல்லடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்