ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பிரியாணி போட்டியில் கலந்து கொண்ட நபருக்கு இர்ஃபான் உள்ளிட்ட யூ டியூபர்கள் உதவியுள்ளது பாராட்டுகளைப் பெற்றுள்ளது... கோவை ரயில் நிலையம் அருகே அண்மையில் நடத்தப்பட்ட பிரியாணி சாப்பிடும் போட்டியில் சரவணம் பட்டியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவர் 2வது பரிசை பெற்று 50 ஆயிரம் ரூபாய் வென்றார். கணேச மூர்த்தி தன்னுடைய ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக போட்டியில் பங்கேற்றதாக கண்ணீருடன் பேசிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது. இந்நிலையில், இர்ஃபான், சூர்யா, கணேஷ், சுனிதா, டேன் ஜே ஆர் உள்ளிட்ட யூ டியூபர்கள் ஒன்றிணைந்து ஒரு லட்சம் ரூபாயை கணேச மூர்த்தியின் மகனது மருத்துவ செலவுக்காக அளித்துள்ளனர்...