கோவையில் இரவில் பயங்கரம்..திடீர் மூச்சுத்திணறல்.. உயிர் பயம் - ஒரு கிராமமே வீதிக்கு ஓடிவந்த துயரம்

Update: 2024-04-30 04:06 GMT

கோவையில் இரவில் பயங்கரம்..திடீர் மூச்சுத்திணறல்.. உயிர் பயம் - ஒரு கிராமமே வீதிக்கு ஓடிவந்த துயரம்

கோவை மாவட்டம் காரமடை அருகே, தனியார் சிப்ஸ் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த‌தால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சென்னி வீரம்பாளையத்தில், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆலை 8 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த‌தாக தெரிகிறது. இந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்து அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு முச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சற்று தொலைவில் உள்ள கோயில் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், 108 அவசர ஊர்தி மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், ஆலையிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்