கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை
நடத்த சிபிசிஐடி தரப்பு கால அவகாசம் கேட்டதை அடுத்து நவம்பர் 29க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் 2017இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை பொறுப்பு நீதிபதி லிங்கம் முன் இன்று நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டபட்டவர்களில் வாளையாறு மனோஜ், சயான் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி போலிசார் தரப்பில் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி லிங்கம் தற்போது வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டறிந்தார். அரசு தரப்பில், சிபிசிஐடி போலீசார் சாட்சிகளிடம் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதால் கால அவகாசம் கேட்டனர். இதனையடுத்து நீதிபதி லிங்கம் நவம்பர் 29ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.